வருங்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே போகும். அதனால்தான் இங்கே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அடுத்தடுத்து விழாக்கள் வந்தபடி இருக்கின்றனவே என்று நீங்கள் நினைக்கலாம். விழாக்கள் குறைந்தால் பக்தியும் பெண்களின் முக்கியத்துவமும் குறைந்துவிடும். எந்த விழாவை கொண்டாடினாலும் உள்ளத்தில் உண்மை உணர்வும் பக்தி உணர்வும் கூடிய பண்பு தேவை. விழா என ஒன்றை அமைக்கிற போது தடைகளும் உண்டு கூச்சலும் உண்டு திருடர்களும் உண்டு பக்தர்களும் உண்டு மனித மானத்தை திசை திருப்பி தெய்வத்தின் பால் ஈர்க்கவேண்டியே விழாக்கள் விழாக்கள் என்பதெல்லாம் உங்களுக்குத்தானே தவிர உங்களுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு அல்ல. ஆன்மாவிற்கு இன்பம் துன்பம் கிடையாது அதற்கு உணவு கிடையாது நகை நட்டு கிடையாது கூந்தல் கிடையாது பட்டாடை கிடையாது ஆசாபாசம் அதற்கு கிடையாது ...
இந்த வலைப்பூ ஆன்மிகத்தையும் அம்மாவின் அற்புதங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது....