விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு , ...