
இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:
“அன்னையை மனமுருக நினைத்து தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்.”
“நான் கூறும் விதிமுறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன்.”
“இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்திரிகம் அழியும்.”
“ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால்தான் நோய்வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல, துருபிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல, உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கி கொண்டு தூய்மையாக வாழ்வதற்கு விரதங்கள் உதவும்.”
“ஒழுக்கமில்லாமல், கட்டுப்பாடின்றி நீ கொண்டு வந்து செலுத்தும் இருமுடியினால் பயன் என்ன? விரதமிருந்து கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகின்ற சிலருக்குக் காட்சி கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை.”
“தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும்! பத்து மாலை போதும்! என்று நிறுத்திக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு.”
“எங்கெங்கே அதிக அளவில் சக்தி மாலை அணிந்து இங்கு வந்து இருமுடி செலுத்துகிறார்களோ அங்கே அழிவுகள் அதிகம் இருக்காது.”
சக்திமாலை – இருமுடியும், சக்திவிரதமும்.
*****************************************
“அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி, சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை வலம் வந்து அன்னையிடம் சரணடைந்தால், நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்”
“சக்திமாலை அணியும் பொழுது ஒரு நிமிடமாவது தன்னை மறந்து சந்தோசமாக இருக்க வேண்டும்.”
“பிறந்ததிலிருந்து இன்றுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்.”
“கருவறை முன்பு அபிடேகம் செய்யும் போது அரை நிமிடமாவது மனதை ஒருமுகப் படுத்தினால் கூட இந்த முறை இருமுடி அணிந்த பலனைத் தருகிறேன்.”
- சக்திமாலை குறித்த அன்னையின் அருள்வாக்குகள்.
சக்தி மாலை:
சக்தி மாலையைச் சிறு பிள்ளைகள் உட்பட ஆண், பெண் அனைவரும் வயது வரம்பு இன்றி அணியலாம். சக்திமாலையை அணிந்து பக்தர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே ஐந்து அல்லது மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டு மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை அடைய வேண்டும்.
சக்திமாலை அணிபவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலோ/சக்திபீடத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள மன்றத்திலோ/ சக்திபீடத்திலோ தான் மாலை அணிய வேண்டும்.
சக்திமாலை, இருமுடிப் பை, டாலர் அகியவற்றினைச் சித்தர் பீடத்திலிருந்தோ அல்லது சித்தர் பீடத்திலிருந்து வாங்கி வைத்திருக்கும் மன்றங்கள் / சக்திபீடங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
சக்திமாலை அணிந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது முதலில் “ஓம்சக்தி” என்று சொல்லுதல் வேண்டும்.
சக்திமாலை அணிந்து விரதமிருந்து சித்தர் பீடம் வந்து திரும்பப் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு தடையல்ல.
சக்திமாலை அணிந்திருக்கும் காலங்களில், உறவினர், பங்காளிகள் வீட்டில் அசம்பாவித காரியங்கள் ஏற்படுமானால் தீட்டு எனக்கருதி மாலையை கழற்றத் தேவையில்லை. மாலையுடனேயே மேற்படிக் காரியங்களில் பங்கேற்று தொண்டாற்றலாம்.
மாலை அணிபவர்கள் (பணிக்கு செல்பவர்கள் உட்பட) ஒன்பது முறைகளுக்கு மேல் மாலை அணிபவர்கள் மஞ்சள் நிற உடைகளும் மற்றவர்கள் சிவப்பு நிற உடைகளும் மட்டுமே அணிய வேண்டும்
கருத்துகள்