முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை




    திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணைஅட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி.....திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது...சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது. 

    கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி. ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக நகர்ந்தபடி இருந்த து. இத்தனைக்கும் அந்த அன்பர் பக்தி உள்ளவர். ஒரு தடவை சென்னையிலிருந்து திருப்பதி வரை கால்நடையாகவே சென்று வேங்கடத்தானைத் தரிசித்துவிட்டு வந்தார். ஆனாலும் அவர் குடும்பத்தில் வறுமையும், ஏழ்மையும் தாண்டவமாடின. ஏதோ ஊழ்வினை...இந்த நிலையில் அந்த அனபருக்கு சோதனை மேல் சோதனையாக வயிற்று வலி ஆரம்பித்த து. நாளாக நாளாக அது அதிகமாகி வயிறு ஊத ஆரம்பித்த து.அந்த நாயுடுவின் மனைவி அம்மன் கோயிலில் சிறு சிறு தொண்டுகள் செய்வது வழக்கம்.

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்கிறார்களே கலியுகத்துக் கண்கண்ட தெய்வம் என்கிறார்களே அண்ட சராசரங்களையெல்லாம் கருணையோடு காப்பாள் என்கிறார்களே நம் வேதனைகளை அந்த ஆதிபராசக்தி துடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தில்  சென்னை அசோக் நகரில் உள்ள வழிபாட்டு மன்ற வழிபாட்டில் கலந்து கொள்வார் அந்தப் பெண்மனி...

    கணவருக்கு வயிற்று வலி  அதிகப்பட்டு வேதனை அளிக்கவே மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மையத்தில் கணவனைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். வியாதி முதிர்ந்த நிலையில் கொண்டு வந்து இருக்கிறாயே இங்கே வைத்திய சிகிச்சை அளிக்க வசதியில்லை என்று கையை விரித்து விட்டார்கள் டாக்டர்கள்.கையிலோ ஒரு காசும் இல்லை. கடன் கொடுப்பார் யாருமில்லை. கணவரை மீண்டும் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போக வழயில்லை. 

    வெட்கம் மானத்தை விட்டுக் கையேந்திக் கேட்டார் அந்தப் பெண்மணி. அந்தச் சுகாதார நிலையத்தின் வண்டியில் கணவரை அழைத்துச் செல்ல உதவி கேட்டார் அந்த அபலைப் பெண்மணி. அதற்கெல்லாம் சட்டத்தில் இடமில்லையாம்...ஹைதராபாத்திலிருந்து பிழைப்பதற்காக சென்னை வந்த குடும்பம் அது. தரும மிகு சென்னையில்  அந்த அபலைப் பெண்மணியின் அபயக் குரலைக் கேட்க ஆளில்லை. ஒரு ஆட்டோ டிரைவரைக் காலைப் பிடித்துக் கெஞ்சினார் அந்தப் பெண்மணி. நல்ல வேளை அப்போது அந்த ஆட்டோ டிரைவரின் உள்ளத்தில் தெய்வம் குடிகொண்டது போலும் அங்கிருந்து சென்னையில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து வந்து சேர்ந்தார்  ஆட்டோ டிரைவர்.

    பொது மருத்துவமனையிலும் அந்தப் பதிலையே சொன்னார்கள். வியாதி முற்றிவிட்டது. இனி வைத்திய சிகிச்சை அளித்தாலும் பலன் இருக்காது. பேசாமல் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடு என்றுதான் பதில் வந்த து. இப்போது எப்படி கணவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்வது டாக்டர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அன்றைய இரவு வரைக்குமாவது மருத்துவமனையில் தங்கியிருக்க அனுமதி அளிக்குமாறு வேண்டினார் அந்த பெண்மணி.இரவு நேரம் உலகமெல்லாம் உறங்குகிற அந்த இரவு நேரம் அந்தப் பெண்மணிக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக நீண்டு கொண்டே சென்றது.என்றைக்கோ ஒரு அம்மா கோயிலில் சென்று செய்த சிறு தொண்டு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நைந்த உள்ளத்தோடு செய்த வழிபாடு அனைத்தும் சேர்ந்து கை கொடுக்க உதவிற்று..ஆம் எல்லோரும் கை விரித்து விட்ட நிலையில் கணவரை நாளை வீட்டுக்கு எப்படி அழைத்துச் செல்வது என்ற சிந்தனையில் தடுமாறிக் கொண்டு வாழ்க்கையின் கசப்புகளை விழுங்கிக் கொண்டி இருந்த வேளையில்..... 


    மனிதாபிமானமே செத்துப் போன அந்த நகரத்தில் ஒரு மருத்துவமனையில் அங்கே நள்ளிரவில் மின்னல் ஒன்று பளீரென வெளிச்சம் கொடுத்த து போல அங்கே ஒரு அற்புதம் நடைபெற்றது.ஆம் அந்த நள்ளிரவில் ஒரு நர்ஸ்  தூய வெள்ளை உடை அணிந்த நர்ஸ் அந்த அம்மாள் கணவர் முன்  நின்றாள்  அவர் உடம்பில் செருகப்பட்டிருந்த குழாய்களை பிடுங்கி எறிந்தாள். அந்த அன்பரின் வயிற்றைத் தடவி கொடுத்தாள். அவர் கண் காண அபயகரம் காட்டினாள். அவர் பார்த்திருக்கும்போதே அப்படியே மறைந்து போனாள்.கணவர் அந்த அம்மாவை அழைத்து விளித்துக்காட்ட அந்த அம்மாவோ பிசாசு என்று பயந்தார். அது நடந்த அடுத்த கணம் அந்த அன்பர் படுக்கை மீது ஏறி நின்றபடி அந்த நர்ஸ் போன திசைநோக்கி தொழுதபடி நின்றார்.அந்த ராத்திரியில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். விஞ்ஞானத்தின் தோல்வியை மெய்ஞ்ஞானம் வென்றிருப்பதைக் கண்டனர். நாயுடு அம்மாவின் மாங்கல்ய பாக்கியம் என்று பாராட்டினர். 


    காலம் கடந்த பாராட்டு பக்தர்கள் குற்றங்களை பொறுத்துக் குணங்களை மட்டும் ஏற்பவள் யாரோ எறும்பு முதல் யானை வரை அன்னம்  அளிக்கும் அன்ன பூரணி யாரோ அந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்று நள்ளிரவில் வெள்ளை உடை உடுத்தி நர்சாக வந்து காட்சியும் கொடுத்து நோயாளின் வயிற்றைத் தடவி அபயகரமும் காட்டி மறைந்த அற்புதம் அந்த நள்ளிரவில் அமைதியாக முடிந்து விட்டது..

    அம்மா மருவூர் தாயே தெரிந்தோ தெரியாமலோ ஒரு தடவை உன் பெயரைச் சொன்னாலே எவ்வளவு உதவி செய்கிறாய் தாயே  அந்த ஆபத்து நேரத்தில்  ஒரு கணம் தோன்றி  கருணையைப் பாய்ச்சி விட்டு ஓடோடி மறைந்து போகிறாயே தாயே அந்தக் கருணை உன் பக்தர்களை அவர்கள் ஆயுள்வரை உன்னிடம் பிரியத்தை உண்டாக்குகிறதேஅற்புதங்களால் மட்டும் பக்தி வந்து விடாதடா மகனே என்று எங்களைப் போன்ற முட ஜென்மங்களைப் புரிந்து வைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்கிறாய் எங்களைப் படைத்த வளே நீ அல்லவாபுழவாய் பிறந்தாலும புண்ணியா நின்னடிகள் என் மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேண்டும் என்று பாடினாரே மாணிக்கவாசகர் அதுபோல அம்மா உன் அவதார கால அற்புதங்களும் உன் கருணையினால் நீ நடத்துகின்ற திருவிளையாடல்களும் இந்தப் பிறப்பில் நினைத்து நினைத்துச் சுவைக்கிறோம்.

     தேனாய்த் தித்திக்கிற இந்த சுவையான அனுபவங்கள் எங்களுக்கு இன்னொரு பிரவி இருக்குமாயின் தொடர  வேண்டும் தாயே அப்படித்  தொடர்வதற்கு உன் மனம் இரங்குமா?

Thanks to:Sakthi n. kalyanasuntharam, maambalam,Sakthi oli

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும் . ஐம்புலன்களை அடக்கி , மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும் . உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும் . விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும் . மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும் . காலை , மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும் . காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம் . மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் . அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் , ஐவர் குழுவாகவோ , மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு ,