முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

     திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அட்சரங்களில் நான் அகரமாக உள்ளேன் என்றான் கீதையில் கண்ணன். அ என்று எழுத்துடன் வருவது அம்மா. உலகத்தில்  கெட்டா அப்பா உண்டு. கெட்ட அம்மா கிடையாது. குடும்பத்தில் உள்ள வேதனைகளையும், சோதனைகளையும் அம்மாதான் சுமக்கிறாள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய் என்பது  பழமொழி. மனிக உறவிலேயே தாய்தான் தெய்வ அன்பு காட்டுகிறாள்.  அந்த த் தாயினும் தாயாய் உயிர்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி..... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்னும் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியின் பொருளை அனுபவத்தில் அன்னை ஆதிபராசக்தி எனக்குப் புரிய வைத்தாள். எனக்குத் தரிந்த குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது... சென்னை மாம்பலத்தில் ஒரு குடும்பம். நாயுடு வகுப்பைச் சேர்ந்த குடும்பம் அது.       கணவன், மனைவி, 3 பெண்கள் கொண்ட குடும்பம் அது .  ராயப்பேட்டையில்  தபால் நிலையத்தில் தபால்கார ர்கள் விடுமுறையில் சென்றால் அந்த இடத்தில் போய் வேலை செய்வார் அந்த அன்பர்.. தொட்டுக் கொள்ள துடைத்துக்கொள்ள என்ற அளவில் மட்டும் பொருளாதார  வசதி.   ஏதோ அவர்கள் வாழ்க்கை வண்டி மெதுவாக ந

அன்னையின் அருள்வாக்கு

  " பெற்ற பாசத்திற்கு அன்று தொப்புள் கொடி, வளர்த்த பாசத்திற்கு இன்று கட்டு முடி… அம்மா நமக்காக ஏற்படுத்தித் தந்த தைப்பூச சக்திமாலை இருமுடி எனும் பொன்னான வாய்ப்பை அம்மா கூறியபடி சிறப்பான முறையில் பயன்படுத்தி, நம் முன் ஜென்ம, நிகழ்கால பாவ மூட்டைகளைக் குறைத்து, ஆன்ம ஈடேற்றத்தையும், வேண்டிய வரங்களையும் பெற்று வாழ்வில் மேன்மையடைவோம். ஒம்சக்தி பராசக்தி…” விதியையே மாற்ற வேண்டுமானால்…           " உன் விதியை மாற்றியமைக்கும் வல்லமை எனக்கு உண்டு. சாதரணமாக உன் விதியை அனுபவிக்கும் படி நான் விட்டு விடுகிறேன். என்னிடம் அளவுகடந்த பக்தி செலுத்தி, சரணாகதியடைந்து நான் சொல்கிற பணிகளைச் சிரத்தையோடு செய்து வந்தால், அப்போது உன் விதியையும் மாற்றியமைக்கும் செயலை மேற்கொள்கிறேன் இருமுடி – பொருள்       " இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இதயத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன், மனைவி இருவரின் அகத்தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். மற்றும் மனிதனின் அகமும், புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்.” குடும்பத்தோடு சந்நிதிக்கு வா           &q