மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் செய்யும்போதோ பிரதோஷ வழிபாட்டின் போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்! திருநாளன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும்போதும் வீட்டில் வழிபடும்போதும் துதிக்கும் வகையில் போற்றித் திருஅகவலில் உள்ள நாமப் போற்றிகள் தொகுப்பு உங்களுக்காக! ‘போற்றித் திருஅகவல்’ தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்ஆர் உருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போ...
உ லகிலேயே மிகப்பழைமையான மலைகளில் திருவண்ணா மலையும் ஒன்று. இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்பர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்தக் கலி யுகத்தில் மருந்து மலையாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை என்கின்றன புராணங்கள். இது `ஆர்க்கேயன்’ காலத்து மலை என்றும், இது முன்னர் எரிமலையாக இருந்து பின்னர் குளிர்ந்தது என்றும் சொல்வர். அ ண்ணுதல்- நெருங்குதல்; அண்ணா- நெருங்க முடியாதது என்று பொருள். திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை என்பதால் அண்ணா மலை. ‘திரு’ எனும் மரியாதை சேர்த்து திருஅண்ணாமலை என்பதே சரி. அ ருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக் ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவரும், மார்க்கண்டேய ரும் கூறியுள்ளனர். உ லகஅளவில் உள்ள எல்லா சிவன் கோயில்களிலும்,கருவறையின் பின்புறம் ‘லிங்கோத்பவர்’ இடம் பெற்றிருப்பார். அவர் தோன்றிய இடம்-திருவண்ணாமலை. பி ருங்கி முனிவர...