சக்தி விரதம் ஏன்?
"ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால் தான் நோய் வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல், துருப்பிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல், உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கிக் கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்வதற்கு விரதங்கள் உதவும்."
வசதி படைத்தவர்கட்கு - மன்றங்கட்கு:
"ஏழைச் சிறுவர் 5 பேர்; சிறுமியர் 5 பேருக்கு இருமுடி போட்டு அழைத்து வந்தால் பலன் உண்டு. அனாதைக் குழந்தைகளையும் அணைக்க வேண்டும் என்பதற்காகப் பத்து பேருக்கு மாலை போட்டு அழைத்து வரும்படிச் சொல்கிறேன். அவர்களுடன் இருந்து செய்தால் பெருமை! பெருமை பணத்தால் இல்லை. அன்பாலும் தொண்டாலும் வருகிற பெருமையே பெருமை! அவற்றுக்குத்தான் பலன் உண்டு."
மாந்திரீகம் அழியும்
"இருமுடி அணிந்தால் உங்களுக்கு எதிரான மாந்தீரீகம் அழியும்."
ஏழைக்கு இருமுடி
"எத்தனை ஏழைக்கு இருமுடி அணிய வைத்து அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்குப் பலன் உண்டு."
ஒன்பதுடன் நிறுத்திக் கொள்ளாதே
"தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும் என்று நினைத்துக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு முடிக்கும் கட்டாய பலன் உண்டு."
அவரவர் வினைகள் வெவ்வேறு
"ஒன்பது முறை இருமுடி செலுத்திவிட்டால் உன் குறைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. சிலருக்கு ஐந்தாவது இருமுடி அணிந்தாலே வினைதீரும். சிலருக்கு 10, 11 என்று அணிந்தாலும் வினைகள் தீர்வதில்லை."
இருமுடியும் - பலனும்
"இருமுடி செலுத்தியதும் பலனை உடனே எதிர்பார்க்காதே! ஒரு செடியை ஊன்றி நட்டபின் அது வேர்பிடித்துத் தளிர் விட்டுப் பூத்து பின் காய்த்து அதன்பிறகே கனி வரும். அதுபோல் உன் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு."
இடையில் நிறுத்திக் கொள்ளாதே!
"இருமுடி அணிவதால் துன்பத்திலிருந்து நம்மை அம்மா காப்பாற்றுகிறாள், பாதுகாக்கிறாள் என்பதைத் தற்போது உணர்கிறீர்கள். செலுத்த வேண்டிய இருமுடியைச் செலுத்தி முடித்துவிட்டோம் என்று நினைத்து நிறுத்திக் கொள்ளாதே! அவ்வாறு நினைத்தால் எல்லாம் முடிந்துவிடும். இருமுடியை விட்டுப்பார் என்ன நடக்கிறதென்று தெரியும். ஒரு சமயம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் போகப்போக இரண்டு மடங்கு கஷ்டங்கள்தான் வரும்."
கருத்துகள்