ஓம் சக்தி.
அருள் திரு அம்மாவின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு!
பேராசிரியர் சோமசுந்தரம், பூம்புகார் .
"அடிகளாரின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு" என்பது அன்னையின் அருள்வாக்கு.
அன்னையின் அருள்வாக்குகள் உபதேச வார்த்தைகள் மட்டும் அல்ல; உண்மை வார்த்தைகள். உளமாரத் தொண்டும் உண்மையான பக்தியும் கொண்டு தொண்டு செய்கின்ற பக்தர்களுக்கு அனுபவ வார்த்தைகளாக மலரும் மகா வாக்கியங்கள் அவை. உபநிடதங்கள் சொல்லும் உயர்வான வார்த்தைகள்தான் மகாவாக்கியங்கள் என்று சொல்லப்படுகின்றன.
அவை வடமொழியில் உள்ள வாக்கியங்கள். தமிழில் மருவத்தூர் அம்மா சொல்லும் அருள்வாக்குகள் எல்ல்லாம் உபநிடதங்களுக்கு மேலான உன்னதமான மகாவாக்கியங்கள். அர்த்தங்களை மட்டும் கொண்டிராமல் அனுபவமாக மலரும் மகாவாக்கியங்கள்.
அப்படிப்பட்ட மகவாக்கியங்களில் ஒன்றுதான் "அடிகளார் பாதத்துக்கும், பாதம் பட்ட மண்ணுக்கும் மகிமை உண்டு மகனே!" என்னும் மகா அருள்வாக்கு. அனுபவம் ஒன்றால் அதை, நிகழ்த்திக் காட்டிய அதிசயம் ஒன்றைப் பார்ப்போம்!.
அது ஒரு இருமுடி செலுத்துகிற காலம். தஞ்சாவூரில் அமைந்துள்ள சக்திபீடத்தின் தலைவராக இருந்த தொண்டர் ஒருவர் சக்தி. ஜெயராமன் அவர் பெயர். அருள்திரு. அம்மாவிடம் பாதபூஜை செய்து ஆசி பெற வந்தார்.
அருள்திரு அம்மா அவர்கள் அவரைப் பார்த்து " சார்! இந்த இருமுடிக் காலத்தில், இங்கேயே இருந்து தொண்டு செய்ங்க சார்! அன்னதானக் கூடத்தின் வாசல்லே படுத்துகிற வேலையைப் பாருங்களேன் சார்!" என்று அருள் கூர்ந்து சொன்னார்கள்.
தாயின் பணியைத் தலைமேற்கொண்டு செய்யும் தன்மை கொண்ட அன்பர் அவர்; அவரைக் கொண்டு அவருக்கும், அவரைக் கொண்டு நமக்கும் ஓர் அற்புதத்தை நடத்திக் காட்ட அருள்திரு. அம்மா அவர்கள் திருவுள்ளம் கனிந்து அப்போதே தீர்மானித்து விட்டார்கள்.
ஆமாம்!
அந்த தொண்டர் அருள்திரு. அம்மாவின் உத்தரவுப்படி மேல்மருவத்தூரில் தங்கி , அன்னதானக் கூடத்தின் வாசலில் நின்று கொண்டு, பக்தர்களை வரவேற்றும், கூட்டம் அதிகமாக இருக்கிறபோது ஒழுங்குபடுத்தியும் தொண்டு செய்து கொண்டு இருந்தார்.
அருள்திரு அம்மா அவர்கள் தமக்கு தோன்றுகிற நாட்களில் , அன்னதானக் கூடத்திற்கு வந்து பணிகள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்று பார்வையிட வருவதுண்டு ! பார்வையிட வருவது என்பது ஒரு உத்தி ! அவ்வளவுதான்!.
" அம்மா இடுகின்ற பணிகளைச் சிரத்தையோடு செய்கிற பக்தனைப் பார்க்க நானே வருவேன்; என்னைத் தேடி நீ எங்கும் அலைய வேண்டாம்" என்னும் வார்த்தைகளை உண்மையாக்கத் தானே அருள்திரு. அம்மா அவர்கள் தொண்டர்கள் பக்தியோடு பனி செய்யும் இடத்துக்குப் பார்வையிட வருகிறார்கள்....?
அப்படித்தான் ஒருநாள் அருள்திரு அம்மா அவர்கள் அன்னதானக் கூடத்துக்குப் பார்வையிட வந்தார்கள். தஞ்சாவூர் தொண்டர் அன்னதானக் கூடத்து வாசலில் நின்று பணி செய்து கொண்டிருந்தார். அங்கெ வந்த அருள்திரு அம்மா அவர்கள் " என்ன தஞ்சாவூர்க்கரரே ! இங்கேயே தங்கி இருக்கீங்கிளா ! பணியெல்லாம் எப்படி இருக்கு?" என்று கேட்டுக் கொண்டே காரில் இருந்து இரங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னதானக் கூடத்துக்குச் செல்லும் தரைப்பாதை, ஆற்று மணல் கொட்டியிருந்த காலம் அது!.
தஞ்சாவூர்த் தொண்டருக்கு மனதில் ஒரு மின்னலடித்தது. அடிகளார் திருவடி படிந்த தடங்களைக் கவனமாக பார்த்து மனதில் பதிய வைத்து கொண்டார் அவர்.
"அடிகளார் பாதத்துக்கும் பாதம் பட்ட மண்ணுக்கும் மகிமை உண்டு மகனே!"
அந்த இடத்தில இருந்து , ஆசை ஆசையாக அருள்திரு. அம்மா அவர்களின் திருவடி மண்ணில் கொஞ்சம் கையில் எடுத்துக் கொண்டார். திருவடியையே தரிசித்துக் கொண்டிருந்தார்.
அருள்திரு அம்மா அவர்கள் அவர் பார்வையில் இருந்து மறையும் வரை அப்படியே.அருள்திரு அம்மா அவர்களின் திருவடிப் பட்ட மண் அவர் கையில் இருந்தது அதைப் பத்திரப்படுத்த நினைத்து, தன கையைப் பார்த்தார். மூடியிருந்த அவர் கைகளில் இருந்து , ஆமாம் , அவர் கைகளில் இருந்துதான்....
அவர் கைகளில் இருந்த அருள்திரு அம்மா அவர்களின் திருவடி மண், மூடியிருந்த கை விரல் இடுக்குகள் வழியாக திருநீறாக மாறி பொங்கிப் பொங்கி வெளியில் வந்து கொண்டிருந்தது. ஆமாம்! அடிகளாரின் திருவடி மண், திருநீறாக உயிர்பெற்று பொங்கி வழிந்து கொண்டு இருந்தது .
"அடிகளார் கொடுக்கிற திருநீற்றுக்கு உயிர் உண்டு" என்பது அன்னையின் அருள்வாக்கு. ஆனால் அருள்திரு அம்மாவின் திருவடிப்பட்ட மண், கருத்தோடு பணி செய்கின்ற தொண்டனின் கையில் கூட திருநீறாக மாறியது; உருப்பெற்றது!
உயிர் பெற்றது:
அருள் நிறைந்த இந்த அனுபவம் " அடிகளாரின் பாதம் பட்ட மண்ணுக்கு மகிமை உண்டு மகனே!" என்னும் அருள்வாக்கை அனுபவ வாக்காகவும், ஆதார வாக்காகவும் மருவூர்ச் சக்தியின் மகா வாக்கியமாகவும் நிலைப்படுத்தபடுகிறது. "அடிகளார் பாதம் பட்ட மண்ணுக்கும் மகிமை உண்டு " என்று புலப்படுகிறது.
'அம்மா உன் வாசலிலே
மண்ணெல்லாம் திருநீறு'
என்று பாடுவார்கள்.
'அடிகளார் பாதம் பட்ட
மண்ணெல்லாம் திருநீறு!"
என்றெல்லவா படத் தோன்றுகிறது.
ஓம் சக்தி
நன்றி: சக்தி ஒலி

கருத்துகள்