ஆண் ஆணுக்கு பெண் பெண்ணுக்கு
மன்றத்தில் ஆண் ஆணுக்கும் பெண்ணுக்கும்
சக்தி மாலை போட வேண்டும். மாற்றிச் செய்யக் கூடாது.
சக்தி மாலை
சக்தி மாலை அணிந்தி வரும்போது தொண்டு
செய்ய வேண்டும். பத்துப் பைசாவாவது வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கு இருமுடி
எத்தனை ஏழைகளுக்கு இருமுடி அணிய வைத்து
அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் பலன் உண்டு.
ஒன்பதுடன் நிறுத்திக் கொள்ளாதே
தொடர்ந்து இருமுடி செலுத்து ஒன்பது மாலை
போதும் பத்து மாலை போதும் என்று
நிறுத்திக் கொள்ளாதே நீ செலுத்தும் ஒவ்வொறு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு.
பயன் உண்டு
கூச்சல் சலசலப்பு இல்லாதுபடி மெளனமாக
இருமுடி செலுத்தினால் சக்தியுன்டு. கட்டாயம் மெளனம் கடைபிடிக்க வேண்டும். இருமுடி
ஏந்திப் புறப்படும் போது உன் உறவினர், சுற்றத்தார் எல்லோரையும் அழைத்து
வழிபடு அன்னதானம் செய்து அவர்கள்
கொடுக்கும் காணிக்கையை இங்கே கொன்டு வந்து செலுத்து.
வசதி படைத்தவர்களுக்கு
ஏழைச் சிறுவர் 5 பேர் சிறுமியர் 5 பேர்
ஆக இருமுடி போட்டு அழைத்து வநதால் பலன் உண்டு.
காட்சி கொடுப்பேன்
ஒழுக்கமில்லாமல் கட்டுப்பாடின்றி நீ
கொண்டு வந்து செலுத்தும் இருமுடியினால் என்ன பயன் விரதமிருந்து கட்டுப்பாட்டை
மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகிற சிலருக்கு காட்சிக் கொடுப்பேன். அந்தக் காட்சி
பெற்றவர்களுக்கு மறு பிறவி இல்லை.
கணக்குப் பார்க்காதே
அடிக்கடி தாயின் சந்நதிக்கு வருவதற்கோ,
இருமுடி செலுத்துவதற்கோ, வேள்வியில் கலந்து கொள்வதற்கோ கணக்குப் பார்க்காதே இங்கே
அடிக்கடி வரவரத்தான் உன்னுடைய சிறப்புகள் மேலோங்கும். ஒருமுறை இரு முடி செலுத்திய
பின் பயன் இல்லையே என்று நினைக்க வேண்டாம், ஒவ்வொறு முறையும்
செலுத்தியவர்களுக்குப் பலனுண்டு
நன்றி சக்தி ஒலி
கருத்துகள்