14.08.2011 அன்று மதுரையில் அம்மாவுக்கு வரவேற்பு அளிக்கும் முறையில் மாபெரும் ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. நான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு பரமத்தி வேலூர் வழியாக திரும்பிவிட்டேன். உடன் வந்த சக்திகளை பத்திரமாக அவரவர் இடத்துக்கு கொண்டு சேர்த்து விட்டேன்
அடுத்த நாள் மாலை அடுத்து அம்மா நடத்தவிருக்கும் கும்பாபிடேக நிகழ்சிகளில் கலந்து கொள்ள விரும்பினேன். நிகழ்ச்சி நிரலை எடுத்து படித்தேன். 16.08.2011 அன்று ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகம் திறக்கப் போவதாக அறிந்து அந்த இடத்தின் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பயனவழிகளை விசாரித்தேன்..
இப்போது மதுரையில் நல்ல மழை பொழிந்து கொண்டு இருக்கிறது அங்கே மழை பெய்கிறதா சக்தி....?
என்று விசாரித்தார் எதிர்முனையில் பேசியவர்.
மழை வருவது போல இருக்குது சக்தி! ஆனா பெய்யலை! என்று பதில் கூறினேன். அப்படியா என்று அவர் கேட்டதும் , நான் நாமக்கல் மாவட்டத்தில் சரியான பக்தி இல்லை போல் இருக்கு! என்று சொல்லி ஓம் சக்தி! என்று கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டேன்.
அடுத்து ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு பூமியையே அதிர வைக்கும் அளவுக்கு இடியோசையும், கண்களைப் பறிக்கும் அளவுக்கு மின்னலும் தொடர்ந்து ஏற்பட்டன.
நான் பயத்தோடு டாலரைக் கையில் பிடித்து கொண்டு அம்மா! இந்த இயற்கையின் சீற்றத்தை எங்களால் தாங்க முடியாது தாயே! நாங்கள் ஏதாவது தவறு செய்து இருந்தால் எங்களை மன்னித்து விடு தாயே! என்று வேண்டி கொண்டேன்.
அப்போது உள்ளிருந்து ஒரு குரல் என்னைக் கேட்டது.
பக்திக்கா உங்கள் பக்திக்கு அருள் புரிவதா உங்கள் பக்திக்கு அருள் புரிய நினைத்தால் உங்களுக்கெல்லாம் அணு அளவு அருள்தான் கிடைக்கும்.
இந்த கலியுகத்தில் நீங்கள் எல்லாம் படுகிற கஷ்டத்தை கண்டு உங்களை காப்பாற்ற நானே வலிய வந்து அருள் கொடுக்கிறேன் என் ஆலயம் வந்து தரிசிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அருள் கிடைக்கும். ஆனால் ஆன்மிகப் பயணம் என்பதில் வானத்து மழை போல அருள் பொங்கும் அவரவர் இஷ்டம் போல வேண்டும் அளவு பெற்று கொள்ளலாம். உங்கள் பக்திக்காகவா அருள்பாளிக்கிறேன் என்ன பக்தி உங்கள் பக்தி?
ஆன்மிக பயணம் என்றால் சாமான்யமானது என்று நினைத்து கொண்டாயா?
உலகில் எந்த மூலையில் இருந்தும் யார் எதை பேசினாலும் எனக்கு வந்து சேரும்...
மதுரையில் ஆன்மிகப் பயணமாக நான் இருக்கும் பொது நீ மதுரைக்குப் பேசினால் எனக்குத் தெரியாமல் இருக்குமா....? என் காதுக்கு எட்டாமல் போய்விடுமா?
இவ்வாறு வேகத்துடனும், வருத்தத்துடனும் அம்மாவின் குரல் ஆன்மாவில் பிரதிபலித்தது. மிகவும் பயந்து போன நான் , டாலரை இறுகப் பிடித்து கொண்டு, நான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டு, நான் 108 முறை குரு மந்திரம் கூறிவிட்டு உறங்கிவிட்டேன்.
அடுத்த நாள் மதுரைக்கு கிளம்பும் போது அம்மாவிடம் எங்கள் மாவட்டத்திற்கு உங்கள் அருளவேண்டும் அம்மா நாளைக்கு நான் நீ இருக்கும் மதுரைக்கு வந்து விடுவேன். அப்போது எங்கள் பகுதியில் இடி மின்னல் இல்லாமல் தேவையான மழை கொடு தாயே என்று வேண்டிக் கொண்டு புறப்பட்டேன்.
அன்று புதன் கிழமை கரடிக்கல் என்ற இடத்தில் கும்பாபிடேக நிகழ்சிகளைத் தரிசிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தேன்..
கும்பாபிடேகம் முடிந்து, தீர்த்தம் தெளிக்கப் பட்டது. எல்லோர் மீதும் தீர்த்தம் தெளிப்பதற்கு வசதியாக அண்டாவில் தீர்த்தம் ந்ரப்பி அதை ஒரு டியுப் வழியாக அனைவர் மீதும் தெளித்தார்கள். நல்ல யோசனை! நல்ல ஏற்பாடு!
தீர்த்தம் தெளித்தபோது கையிலிருந்த பிளாஸ்டிக் டப்பாவின் மூடியைத் திறந்து காண்பித்தேன். அதில் சிறிதளவே தீர்த்தம் விழுந்தது. அதை இருக்க மூடி விட்டு நின்றேன். மீண்டும் தீர்த்தம் விடப்பட்டது. இருப்பில் உள்ள தீர்த்தத்தை குடித்துவிட்டு மீண்டும் டப்பாவைத் திறந்து பார்த்தபோது அதில் உயுருடன் சிறிய கரு வண்டு ஓன்று இருந்தது. மூடிய டப்பாவில் இந்த வண்டு எப்படி வந்தது? என்று யோசித்தவாறு அந்த வண்டை வெளியே தட்டிவிட்டு நிறைய தீர்த்தம் பிடித்து வைத்து கொண்டேன்.
பின் சக்தி பீடத்துள் சென்று கருவறை அம்மாவைத் தரிசித்து விட்டு சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தேன்.
அப்போது மூடிய டப்பாவில் வண்டு எப்படி வந்தது உயிரை உண்டாக்குவதும் நான்தான் அழிப்பதும் நான்தான் ஆன்மிகப் பயணம் என்ன சாமான்யமா இதைச் சக்தி ஒளிக்கு எழுது என்று அம்மா உணர்த்தினார்கள்.
அன்று மாலை பரமத்தி வேலூர் பகுதியில் இடி மின்னல் இல்லாமல் அருள் மழை கொடுத்தால்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பல மாவட்டத்தவர்களும் கலந்து கொண்ட காரணத்தால் அந்த மாவட்டங்களுக்கும் மழை கொடுத்தால் அன்னை.
அது பருவ மழை அல்ல பராசக்தி கொடுத்த அருள் மழை
என்னவோ அம்மா மதுரைக்கு கும்பாபிடேகம் செய்யப் போகிறாள் அம்மாவை வரவேற்க அந்த மாவட்டத்தார் ஊர்வல ஏற்பாடு செய்கிறார்கள் தொலை தூரம் பொய் நாமும் கலந்து கொள்ள வேண்டுமா என்ன என்று நம் தொண்டர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது நம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
ஓம் சக்தி
சக்தி ஏ கே
பூங்கோதை,
இராமநாயக்கன்
பாளையம், நாமக்கல் மாவட்டம்.
கருத்துகள்