அபிடேக ஆராதனைகளால்....
நீ செய்யும் அபிடேக ஆராதனைகளால் மட்டுமே
உன்னுடைய தீவினைகள் தீர்ந்துவிடாது. உன் ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும். கலங்கிய
நீருக்கு எடை அதிகம். சுத்தமான நீருக்கு எடை குறைவு. உன் உள்ளம் சுத்தமாக
இருந்தால் தான் பாவங்கள் குறையும்.
உன் நிழலே உன்னைக் கண்காணிக்கும்
உன்னுடைய நிழலே உன்னைக் கண்காணித்து
வருகிறது. இருட்டில் நிழலைக் காண முடியாது. வெளிச்சத்தில் நிழல் தெரியும். எல்லாப்
பொருளுக்கும் நிழல் உண்டு. தெய்வ சக்தி நிழலைப் போல உன்னைக் கண்காணித்துக் கொண்டு
வருகிறது.
பரிகாரங்களால் பயனில்லை
ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் குழந்தை
கூனாகவோ, குருடாகவோ, செவிடாகவோ பிறப்பதற்கு அந்த ஆன்மாவின் முன் வினையே காரணம்.
தாய் காரணமாக மாட்டாள். சோதிடர்கள் கூறும் பரிகாரங்களால் அத்தகைய ஊனங்கள் தீர்ந்து
விடாது.
ஏமாற்றுபவனை விடமாட்டேன்
தன் பிள்ளை, தன் பெண், தண் குடும்பம்,
தன் பேரன், தன் பேத்தி எனத் தானும் தன் குடும்பம் மட்டும் வாழவேண்டும்
என்பதற்காகப் பிறர் பொருளைச் சுரண்டி ஏமாற்றுபவனை, மரத்தின் உச்சியில் ஏறிப்பழம்
பறித்துச் சாப்பிடும் வரை விட்டு வைப்பேன். அவனை இறக்கிவிடமாட்டேன். அவன் தானாகவே
கீழே விழுந்து அடிபட வேண்டியவனே. அவனவன்
எண்ணமே அவனவனுக்கு எமனாக மாறும்.
மறுபிறவி சுற்றிச் சுற்றி வரும்
பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்று உண்டு.
மழை பெய்து கடலை அடைவது போல போல ஆன்மா மறு பிறவியை அடைவது உண்டு.
ஒரு விதையானது குழியால் விழுந்து
செடியாகி, மரமாகி, பூ பூத்து காய் காய்த்து பழம் பழுத்து மீண்டும் விதையாவது போல மறுபிறவியும்
சுற்றிச் சுற்றி வரும்.
நீ சம்பாதிக்கும் பொருள்
நேர்மையாக உழைத்து வியர்வை சிந்திப் பெறுகிற பொருள் தான்
உனக்கு நிலைக்கும். மற்றவை நிலைக்காது.
சறுக்கி விழும் ஓர் அடி
ஆன்மிகத்தில் பத்து அடி ஏறினால், பதினோறு அடி சறுக்கி விழுகிறீர்கள். அந்த ஓர்
அடி தான் நீ செய்யும் பாவத்தின் அளவாகும்.
நன்றி சக்தி ஒலி
கருத்துகள்