இருமுடி பொருள் - விளக்கம்:
"இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இயதத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன் மனைவி இருவரின் அகத் தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். பொருள் மற்றும் மனிதன் அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்."ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது:
"இந்த மன்னில் 108 முறை அமர்ந்து தியானம் செய்பவர்களையும் இங்கே 9 முறை இருமுடி செலுத்தியவர்களையும் ஏவல் பில்லி சூனியங்கள் தாக்காது."
உன் அழகு குடும்பத்தின் அழகு:
"இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கி கொள்ளவே.! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளையும் நீக்கி கொள்ளவே இந்த இருமுடி.! ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியாள் பயனில்லை."
காட்சி கொடுப்பேன்:
"இருமுடி ஏந்திக் கொண்டு வருகின்ற சிலருக்கு காட்சி கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவருக்கு மறுபிறவி இல்லை."
எதற்காக இருமுடி?:
"இருமுடி செலுத்துவது எனக்காக அல்ல! உனக்காக! இருமை முடி இருமுடி! ஒருமுடி உன் உள்ளத்து அழுக்குகளைப் போக்கிக் கொள்ள! ஒன்று உன் பாவம் குறைவதற்கு! மற்றொன்று உன் குடும்பத்தின் பாவம் குறைவதற்கு! அதற்காகவே இருமுடி!"
ஆன்ம பலம் பெற:
" ஆன்ம பலம் பெற உணவைக் கட்டுப்படுத்து! மனத்தை கட்டுப்படுத்து! விரதம் இரு! பாதயாத்திரை மேற்கொள்! இங்கே எந்த மாத்திரையும் வேலை செய்யாது மகனே! சக்தி மாத்திரை தான் வேலை செய்யும்!"
தடைகளை மீறிக் கொண்டு வா:
"என்னிடம் வரமுடியாதபடி பல தடைகள் வரும். அவற்றை மீறி கொண்டு வர வேண்டும். அப்போது என் அருள் உண்டு."
துன்பங்களில் இருந்து விடுபட:
"துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் காலை ஆறு மணிக்கு எழுந்து 108, 1008 படித்து முடித்து தியானம், மவுனம் கடைபிடிக்க வேண்டும். தொடர்ச்சியாக இருமுடி ஏந்தி வர வேண்டும். தாய் தந்தையாரிடம் பாசம் இருக்க வேண்டும். ஆன்மிக உணர்வினால்தான் இன்றைய கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும்."
இருமுடியின் ஆற்றல்:
"அழுக்கு நிறைந்த கோணியில் தானியங்களைக் கொட்டி, அந்தக் கோணியைக் கயிற்றால் இருக்க கட்டுகிறார்கள். கோணியில் அதிகமாக உள்ள பொருட்களை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி ஒரு கயிற்றுக்கு உள்ளது. உங்கள் உள்ளம் என்னும் கோணியில் பாவங்கள் நிறைந்து மூட்டையாக உள்ளது. இருமுடி கட்டிவந்து இங்கே அவிழ்ப்பதனால் உங்கள் பாவங்கள் வெளியேற்றப்படுகின்றன. சிறிய கயிறு கோணியில் உள்ள பொருட்களை கட்டுப்படுத்துவது போல உங்கள் இருமுடியை (பாவ மூட்டைகளை) நான் கட்டுப்படுத்துகிறேன்."
கருத்துகள்