முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் ......

 14.08.2011 அன்று மதுரையில்   அம்மாவுக்கு வரவேற்பு அளிக்கும் முறையில் மாபெரும் ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. நான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு பரமத்தி வேலூர் வழியாக திரும்பிவிட்டேன். உடன் வந்த சக்திகளை பத்திரமாக அவரவர் இடத்துக்கு கொண்டு சேர்த்து   விட்டேன்           அடுத்த நாள்   மாலை அடுத்து அம்மா நடத்தவிருக்கும் கும்பாபிடேக   நிகழ்சிகளில் கலந்து கொள்ள விரும்பினேன். நிகழ்ச்சி நிரலை எடுத்து படித்தேன். 16.08.2011 அன்று ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகம் திறக்கப் போவதாக அறிந்து அந்த இடத்தின் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பயனவழிகளை விசாரித்தேன்..   இப்போது மதுரையில் நல்ல மழை பொழிந்து கொண்டு இருக்கிறது   அங்கே மழை பெய்கிறதா   சக்தி.... ? என்று விசாரித்தார் எதிர்முனையில் பேசியவர்.              மழை வருவது போல இருக்குது சக்தி! ஆனா பெய்யலை! என்று பதில் கூறினேன். அப்படியா என்று அவர் கேட்டதும் , நான் நாமக்கல் மாவட்டத்தில்   சரியான பக்தி இல்லை போல் இருக்கு! என்று சொல்லி ஓம் சக்தி! என்று கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டேன். அடுத்து ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு பூமிய

அன்னையின் அருள்வாக்கு,

கலச விளக்கு  வேள்விப் பூசைகள்: உங்களிடம் உள்ள அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பதற்குத்தான் கலச விளக்கு வேள்விப் பூசை. யாகம் யோகத்திற்கு உதவும் ஓம் என்ற ஓங்கார ஒலிக்கும் பயன்படும். உயர்வு தாழ்வுகள் நீக்கவும் பயன்படும். இயற்கையை ஒட்டி நீங்கள் வாழ்வதற்கு வேலிபோலப் பாதுகாக்கும். உலகத்தில் உள்ள சலசலப்புகள் நீங்கிக் கலகலப்பு ஏற்படக் கலசங்கள் உதவும். அதர்மங்கள் நீங்கித் தர்மங்கள் செழிக்க வேண்டுமானால் வேள்விப்பூசை அவசியம். மேல்மட்டம் நடுமட்டம் , கீழ்மட்டம் என்று பாராமல் எல்லோரும் பூசை செய்ய வேண்டும். எந்த வேள்விக்குப் போனாலும் , வந்தாலும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பருத்தி நூல் புடவைதான் உடுத்த வேண்டும். ஜாக்கிரதையுடன் யாக சாலையில் எண்ணெய் ஊற்ற வேண்டும். உனக்கு நீதான் பாதுகாப்பு: ஆன்மிக மாநாடுகளும், கலச விளக்கு வேள்விப்பூசைகளும் உங்களுக்காகவே தவிர எனக்காகவோ அடிகளாருக்காகவோ அல்ல. எந்த அரசும் எல்லோருக்கும் சேர்த்து எந்த நன்மையும் பாதுகாப்பையும் அளித்து விட முடியாது. உனக்கு நீதான் பாதுகாப்பு ஆன்மிக மாநாடுகளும் வேளிவிகளும்தான் பரிகாரம்: இன்று உலகமே கொந்தளிப்ப

அன்னையின் அருள்வாக்கு

அபிடேக ஆராதனைகளால்.... நீ செய்யும் அபிடேக ஆராதனைகளால் மட்டுமே உன்னுடைய தீவினைகள் தீர்ந்துவிடாது. உன் ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும். கலங்கிய நீருக்கு எடை அதிகம். சுத்தமான நீருக்கு எடை குறைவு. உன் உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் பாவங்கள் குறையும். உன் நிழலே உன்னைக் கண்காணிக்கும் உன்னுடைய நிழலே உன்னைக் கண்காணித்து வருகிறது. இருட்டில் நிழலைக் காண முடியாது. வெளிச்சத்தில் நிழல் தெரியும். எல்லாப் பொருளுக்கும் நிழல் உண்டு. தெய்வ சக்தி நிழலைப் போல உன்னைக் கண்காணித்துக் கொண்டு வருகிறது. பரிகாரங்களால் பயனில்லை ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் குழந்தை கூனாகவோ, குருடாகவோ, செவிடாகவோ பிறப்பதற்கு அந்த ஆன்மாவின் முன் வினையே காரணம். தாய் காரணமாக மாட்டாள். சோதிடர்கள் கூறும் பரிகாரங்களால் அத்தகைய ஊனங்கள் தீர்ந்து விடாது. ஏமாற்றுபவனை விடமாட்டேன் தன் பிள்ளை, தன் பெண், தண் குடும்பம், தன் பேரன், தன் பேத்தி எனத் தானும் தன் குடும்பம் மட்டும் வாழவேண்டும் என்பதற்காகப் பிறர் பொருளைச் சுரண்டி ஏமாற்றுபவனை, மரத்தின் உச்சியில் ஏறிப்பழம் பறித்துச் சாப்பிடும் வரை விட்டு வைப்பேன். அவனை இறக்கிவிடமாட்டேன். அ

அன்னையின் அருள்வாக்கு

ஆண் ஆணுக்கு பெண் பெண்ணுக்கு மன்றத்தில் ஆண் ஆணுக்கும் பெண்ணுக்கும் சக்தி மாலை போட வேண்டும். மாற்றிச் செய்யக் கூடாது. சக்தி மாலை சக்தி மாலை அணிந்தி வரும்போது தொண்டு செய்ய வேண்டும். பத்துப் பைசாவாவது வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு இருமுடி எத்தனை ஏழைகளுக்கு இருமுடி அணிய வைத்து அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் பலன் உண்டு. ஒன்பதுடன் நிறுத்திக் கொள்ளாதே தொடர்ந்து இருமுடி செலுத்து ஒன்பது மாலை போதும்   பத்து மாலை போதும் என்று நிறுத்திக் கொள்ளாதே நீ செலுத்தும் ஒவ்வொறு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு. பயன் உண்டு கூச்சல் சலசலப்பு இல்லாதுபடி மெளனமாக இருமுடி செலுத்தினால் சக்தியுன்டு. கட்டாயம் மெளனம் கடைபிடிக்க வேண்டும். இருமுடி ஏந்திப் புறப்படும் போது உன் உறவினர், சுற்றத்தார் எல்லோரையும் அழைத்து வழிபடு   அன்னதானம் செய்து அவர்கள் கொடுக்கும் காணிக்கையை இங்கே கொன்டு வந்து செலுத்து. வசதி படைத்தவர்களுக்கு ஏழைச் சிறுவர் 5 பேர் சிறுமியர் 5 பேர் ஆக இருமுடி போட்டு அழைத்து வநதால் பலன் உண்டு. காட்சி கொடுப்பேன் ஒழுக்கமில்லாமல் கட்டுப்பாடின்ற